எங்கள் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் வேளையில் பழைய மாணவர்களாகிய நாங்கள் எல்லோரும் இணைந்து எங்களிற்கு கல்வியூட்டிய கலைக்கோயிலாகிய கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கு(காரைநகர் இந்துக் கல்லூரி)கனடாவில் பழைய மாணவர் சங்கத்தினை நிறுவி கல்லூரியினைப் பெருமைப் படுத்திக்கொண்டுள்ளோம்.
இச்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள karaihinducanada.com இணையத்தளமானது சங்கத்தின்; வளர்ச்சிக்கும் அதனால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளிற்கும் பயனுடையதாகவிருந்து சேவையாற்ற அனைவரும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கவேண்டும் என அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்;;. கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி உயர்ச்சிக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு எமது கிளை அமைப்பு தயாராகவுள்ளது. இச்சங்கத்தில் இன்னும் இணையாதிருக்கின்ற பழைய மாணவர்கள் அனைவரையும் இணைந்து கற்ற கல்லூரிக்கு உதவ முன்வருமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றோம். கடமையேற்றுள்ள புதிய அதிபருக்கும் எமது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழும் சைவமும் வளர்த்த நாவலர் வழியில் வந்த அருணாசல ஆசிரியரின் பணியினாலும் முத்து சயம்பு ஆசிரியரின் சேவைமனப்பான்மை கடமையுணர்வு விடாமுயற்சியினால் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாலயம் (சயம்பர் பள்ளிக்கூடம்)நிறுவப்பட்டது. அவர் காலத்தில் சேவையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் அளப்பரிய சேவையினால் பாடசாலை வளர்ச்சியடைந்து அதிபராக கடமையேற்ற திரு.ஏ.கனகசபை B.A. காலத்தில் உயர்தரப் பாடசாலையாக உயர்வுபெற்று காரைநகர் இந்துக் கல்லூரி என பெயரும் வழங்கலாயிற்று. அவர் பத்து ஆண்டு காலம் பொறுப்புடன் கடமையாற்றியது போற்றுதற்குரியதாகும்.
முப்பது ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் இருபத்தைந்து ஆண்டுகள் காலம் அதிபராக திறமையாகவும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றி முதலாம் தர கல்லூரியாக தரம் உயர்த்தியிருந்தார்கள். இவரது காலம் கல்லூரியின் பொற்காலமாகும். இவரது காலத்தில் கல்லூரி அதியுயர் நிலைபெற்று பௌதிக வளங்களில் தன்னிறைவு அடைந்தது. கல்லூரியின் வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து அரும்பெரும் தொண்டாற்றிய பெருமகன் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களை எமது சங்கம் போற்றி வணங்குகிறது.
கல்லூரியில் மகத்தான சேவைபுரிந்த அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் எமது சங்கம் போற்றி பெருமை கொள்கின்றது.
கல்லூரி மேலும் பல வளங்கள் பெற்று மேலோங்கவும் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் உயர் சித்திபெற்று விளங்கவுமம் அதிபர் ஆசிரியர்கள் சிறப்பான சேவையாற்றவும் காரைநகர் ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்மபிகை சமேத சுந்தரேசப்பெருமானை பிரார்த்திப்போமாக.
வாழ்க கல்லூரி! வளர்க அதன் கல்விப்பணி!
சின்னத்தம்பி தம்பிராசா
தலைவர்
பழைய மாணவர் சங்கம் -கனடா
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளை தலைவர் சி.தம்பிராஜா அவர்களின் வாழ்த்துச் செய்தி”