பிரித்தானியா லண்டன் பல்கலைக்கழக தகவலியல் துறைப் பேராசிரியரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் உலகில் மிகப்பெரிய தொழில்நுட்பத்துறைசார் நிபுணர்களின் நிறுவனமான மின் மற்றும் இலத்தினியல் பொறியியல் நிறுவனத்தின் (IEEE ) “Fellow” உறுப்பினர் என்ற தகுதியைப் பெற்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளதுடன் தாம் பிறந்த மண்ணுக்கும் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
IEEE இன் எந்தவொரு ஈடுபாட்டுத் துறைகளிலும் தலைசிறந்த சாதனை படைத்த ஒருவருக்கு IEEE Fellow உறுப்பினர் என்ற பட்டம் சூட்டப்படுகின்றது. IEEE Fellow உறுப்பினர் என்ற தகுதி தொழில்நுட்ப சமூகத்தினால் அதிசிறந்த கௌரவமாகவும் முக்கியமானதொரு தொழிற் துறை சாதனையாகவும் அங்கீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
IEEE இன் Fellow உறுப்பினராக்கப்படுவதையிட்டு பேராசிரியர் நல்லநாதன் மகிழ்ச்சியடைவதுடன் “நானும் எனது ஆராய்ச்சிக் குழுவும் வருடக்கணக்காக மேற்கொண்ட ஆராய்ச்சிப் பணிகளின் தரத்திற்கும் அவை கொணர்ந்த பயன்களுக்குமென இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் நான் கௌரவமடைகின்றேன். IEEE மீதும் பொறியியலுக்கு அது அளித்த பங்குகள் மீதும் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கின்றேன். எனவே, IEEE இன் Fellow அங்கத்தவரெனப் பெயர்சூட்டப்படுவது எனக்குத் தனிப்பட்ட முக்கியமான ஒரு சாதனையாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் நவீன இலத்திரனியல் தொடர்பாடல் பொறியியல் துறையில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களை பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் வாழ்த்துகின்றது.
பேராசரியர் நல்லநாதன் IEEE மலேசியாவில் ‘அதிசிறப்புவாய்ந்த’ விரிவுரையாளாராகக் கலந்துகொண்டபோதும், IEEE இன் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருது வழங்கல் நிகழ்வின் போதும் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “எமது கல்லூரியின் பழைய மாணவர் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதனின் மற்றுமொரு சாதனை”