இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலாபூசணம் விருது சமய இலக்கிய பணிகளுக்காக பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இன்று கொழும்பில் இடம் பெற்ற அரச விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது.
காரைநகரை பிறப்பிடமாக கொண்ட பண்டிதர் அவர்கள் காரைநகரில் இரண்டு பரம்பரயினர்க்கு நல்லாசானாக திகழ்ந்தவர். முதலில் யாழ்ரன் கல்லூரியில் ஆசிரியராகவும், பின்னர் விட்டு இந்து கல்லூரியில் ஆசிரியராகவும் தொடர்ந்து அதிபராகவும் நற்பணி ஆற்றியவர்.
HNCE வகுப்புகள் அறிமுகப்படுத்திய காலத்தில் வர்த்தக பாடத்தினை போதித்து பலரை பல்கலைக்கழகம் அனுப்புவதில் முன்னின்று உழைத்தவர்.
தமிழ் இலக்கண இலக்கியங்களை தெளிவுற கற்று பண்டிதராக பட்டம் பெற்ற இவர் தமிழ் பாடத்தினை போதிப்பதிலும் ஒரு முன்னணி ஆசிரியராவர்.
தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன . காரைநகர் மணிவாசகர் சபையில் இவர் ஆற்றும் பணிகள் இதற்கு சான்றாகும்
இவர் ஆற்றிய பணிகளுக்காக காரைநகர் மக்கள் என்றும் நன்றியுடையவர்களாவர்.
இவரது இளமை தோற்றம், புன்முறுவலுடன் வரவேற்கும் பண்பு, அர்ப்பணிப்புடன் ஆற்றிய கல்வி பணிகள், சமய பணிகள், இலக்கிய பணிகள், சீரிய அதிபர் சேவை மெச்சத்தக்கவை.
விருது வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “கலாபூசணம் விருது பெற்ரார் பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை”