காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க (தாய்ச்சங்க) பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நேற்று டிசம்பர் 25ம் திகதி(25.12.2016) அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
பேராசரியர் வே.தர்மரட்ணம், ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன், பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி ஆகியோர் உட்பட்ட பழைய மாணவர்கள் இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தமது தலைமையுரையில் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு தமது பிரத்தியேக நன்றியைத் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டிற்கான செயற்பாட்டறிக்கையை செயலாளர் திரு.நிமலதாசன் அவர்களும், வரவு செலவு அறிக்கையை திரு.சுந்தரலிங்கம் அகிலன் அவர்களும் சபையில் சமர்ப்பித்திருந்தனர்.
புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றபோது பதவிவழித் தலைவராக அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களும் உப தலைவராக கல்லூரியின் முன்னாள் அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் செயலாளராக ந.பாரதி, பொருளாளராக க.நிமலதாசன், உப-செயலாளராக க.நாகராசா, உப-பொருளாளராக வி.கம்சன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக சு.அகிலன், த.சற்குணராசா, ந.யோகநாதன், செ.அருட்செல்வம், சி.கந்தசாமி, பொ.சிறிகரன், க.தில்லையம்பலம், திருமதி யோகலட்சுமி யோகநாதன், செல்வி சிவரூபி நமசிவாயம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களாக கதிரவேற்பிள்ளை கிருஸ்ணகுமார், திருப்புகழூர்சிங்கம் சயந்தன் ஆகியோரும் தெரிவாகினர்.
கூட்ட நடவடிக்கைகளின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “சிறப்பாக நடைபெற்ற பழைய மாணவர்களின் தாய்ச் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்”