பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்)புதிய நிர்வாகத்தினை கனடாக் கிளை வாழ்த்துகின்றது.
பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சென்ற 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடந்தமையையிட்டு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் கனடாக் கிளை நிர்வாகம் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள புதிய நிர்வாகம் கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளை சிறப்புற முன்னெடுத்துச் செல்லும் என நம்புவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
இரு நிர்வாகங்களுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லுறவும் என்றும்போல் நீடித்து வலுப்பெற்று கல்லூரியினை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் என மேலும் நாம் எதிர்பார்க்கின்றோம். இச்சந்தர்ப்பத்தில் முன்னைய நிர்வாகத்தின் சிறப்பான பணியினையும் எமது உதவிகள் சார்ந்து வழங்கியிருந்த ஒத்துழைப்பினையும் பாராட்டி நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்)புதிய நிர்வாகத்தினை கனடாக் கிளை வாழ்த்துகின்றது.”