காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆறாம் தர, பத்தாம் தர மாணவர்கள் வரலாற்றுப் பாடம் தொடர்பான களப் பயணமாக ஊர்காவற்றுறை கடற்கோட்டைக்கு (காமன்கீல்) சென்ற 29-04-2023 அன்று சென்றிருந்தனர். SESIP செயற் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களும் பல ஆசிரியர்களும் மாணவர்களுடன் சென்றிருந்தனர். மாணவர்களது இக்களப் பணயமானது மிகவும் பயனுள்ள வகையிலும் மகிழ்ச்சிகரமாகவும் அமைப்பதற்கு ஸ்ரீலங்கா கடற்படையினரால் பாராட்டும் படியான ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது. காரைநகர் கடற்படை முகாமில் அமைந்துள்ள ஹோட்டலில் மாணவர்களின் காலை உணவிற்கான அனுசரணையினை லண்டனில் வதியும் பழைய மாணவனான திரு.முத்தையா பரஞ்சோதி அவர்கள் வழங்கியிருந்தார்.
இக்களப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://photos.app.goo.gl/djRwfKRZeHwV5Aok8
No Responses to “காரை.இந்துவின் மாணவர்கள் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஊர்காவற்றுறை கடற்கோட்டைக்கு களப் பயணம்.”