கனடா பழைய மாணவர் சங்க நிதி அனுசரனையுடன் 13.12.2017 இல் கொள்வனவு செய்யப்பட்ட வலந்தலைச் சந்திக்கு அண்மையாக உள்ள ஏழு பரப்புக் காணி கடந்த 05 வருடங்களாக கடற்படையினரின் பாவனையிலிருந்து கடந்த 06.04.2023 ஆம் திகதி கல்லூரி நிர்வாகத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பழைய மாணவர் சங்க நிதிபங்களிப்புடன், இக்காணி அளவீடு செய்யப்பட்டு நில வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், எல்லை வேலிகள் மீள அமைக்கப்பட்டு, புதிதாக நுழைவு படலையும் அமைக்கப்பட்டு பெயர் பலகையும் நாட்டப்பட்டது.
இச்செயற்பாடுகளுக்கு பாடசாலை நிர்வாகத்துடன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளும், பழைய மாணவரும் பாடசாலை அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படுபவருமான திரு விநாசித்தம்பி நாகேந்திரம் (லண்டன்) அவர்களும் பூரண ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்காணியை மீளப்பெறுவதற்கு கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தற்போதய அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் ஆகியோரும் பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழுவினரும் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாகவே இக்காணி மீளப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எல்லைவேலிகள், நுழைவுப் படலை என்பன அமைக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “கடற்படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காரை.இந்துவிற்குச் சொந்தமான காணி அளவீடு செய்யப்பட்டு எல்லை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.”