கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் பாடவிதான செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தீவக வலயத்தில் முதன்மைப் பாடசாலை என்கின்ற பெயரை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த ஆண்டு (2014) எமது கல்லூரியின் இணைப்பாடவிதான சாதனைகளை நோக்கும்போது, எமது பாடசாலை மாணவர்கள் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு பற்றி நகரப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிகளை ஈட்டி எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்திலான இணைப்பாடவிதான சாதனைகளின் விபரம்(2014)
2013 ஆம் ஆணடில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி சி.விதுசா பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களையும்,
இம்மாணவர்களை Yarl Geek போட்டிகளுக்காகப் பயிற்றுவித்த ஆசிரியைகளான திருமதி.சிவாஜினி லக்ஸ்மன், திருமதி. பத்மினி சசிதரன் ஆகியோரையும்
இசைப்போட்டிகளுக்காகப் பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி. பங்கயச்செல்வி முகுந்தன் ஆகியோரையும்
ஓவியப் போட்டிக்காகப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அவர்களையும் இவற்றுக்கு ஆதாரமாக இருந்து வழிநடத்தி வரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக்கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “நகரப்பாடசாலைகளுக்கு இணையான சாதனைகளை நிலைநாட்டி வரும் எமது கல்லூரி”