காரை.இந்துவின் ஊட்டப்பாடசாலைகளிலிருந்து 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று காரை.இந்துவில் இவ்வாண்டு அனுமதியைப் பெற்று கல்வியைத் தொடரவுள்ள 13 மாணவர்களிற்கும் பொறியியலாளர் மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் உதவித் திட்டத்தின் கீழ் மாதாந்த உதவித் தொகையின் முதல் மாதத்திற்கான கொடுப்பனவு சென்ற 12-05-2023 அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டது. கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் இம்மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்தகொண்டிருந்தனர்.
அதேவேளை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று இக்கல்லூரியின் வெவவேறு தரங்களிலும் கல்வியைத் தொடருகின்ற 37 மாணவர்களிற்கும் மாதாந்த உதவுதொகை வழங்கும் திட்டம் சென்ற செப்ரெம்பர் 2022இல் மகேஸ்வரன் அவர்களினால் தொடக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த 37 மாணவர்களிற்கும் சித்திரை மாதத்திற்கான உதவுதொகையும் இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டிருந்தது.
கல்லூரியின் பழைய மாணவனும் அதன் கல்வித்தரம் உயர்ச்சிபெறவேண்டும் என்ற கரிசனையுடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஊடாக பேருதவி செய்து வருபவருமான அமெரிக்கா பொறியியலாளர் மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களினால் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஊடாக செயற்படுத்தி வருகின்ற இவ்வுதவித் திட்டமானது கல்வியாளர்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளதுடன் காரை.இந்துவின் கல்வித் தரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது என எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஸ்வரன் அவர்களது முக்கியத்துவம் மிக்க முன்னுதாரணமான கல்விப் பணியினை அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் பாராட்டி மீண்டும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில நன்றியையும் தெரிவித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “பொறியியலாளர் மகேஸ்வரன் அவர்களது உதவித் திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து காரை.இந்துவில் அனுமதியைப் பெற்றுக்கொண்ட 13 மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு உதவுதொகை வழங்கப்பட்டது”