அரச உதவிகள் கிடைக்கப் பெறாத தேவைகளை நிறைவு செய்வதில் கல்லூரிச் சமூகம் பலதரப்பட்ட சவால்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டு வந்துள்ளது. சமூகம் எதிர்கொண்ட சவால்களை நிரந்தரமாகத் தீர்த்து வைத்து கல்லூரியின் சுமுகமான செயற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் அல்லது ஒத்துழைப்புடன் பல வரலாற்றுரீதியான உதவித் திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய திட்டங்களுள் ஒன்றாக தேசிய சேமிப்பு வங்கியில் இருபது இலட்சம் ரூபாவினை நிரந்தர வைப்பிலிட்டு அதன் மூலமாகப் பெற்ப்படும் வட்டித் தொகையிலிருந்து கல்லுரியின் நடைமுறைச் செலவீனங்களான ;மின்சாரக்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், இணையசேவைக் கட்டணம், குடிநீர்க் கட்டணம், பண்பாடு பேணுவதற்கான செலவினம் (விருந்தினர் உபசரணை) போன்றவற்றிற்கு உதவும் திட்டம் 2020 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாண்டின் தொடக்கத்தில் மேலும் இருபத்தைந்து இலட்சம் ரூபாவினை உதவியதன் மூலம் இத்திட்டத்தின் வைப்புத் தொகை நாற்பத்தைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஐந்து இலட்சம் ரூபா இத்திட்டத்திற்கு உதவப்பட்டு வைப்புத் தொகை ஐம்பது இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஐந்து இலட்சம் ரூபாவினையும் அனுப்பிவைப்பதற்கு உதவிய அனுசரணையாளர்களிற்கும் உறுப்பினர்களிற்கும் பழைய மாணவர்சங்கத்தின் கனடாக் கிளை உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
No Responses to “கல்லூரியின் நடைமுறைச் செலவீனங்களிற்கு உதவும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட நிரந்தர வைப்புத் திட்டத்தின் வைப்புத் தொகை ஐம்பது இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.”