காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பதவியேற்று கடமையாற்றி வருகின்றார். கடந்த மூன்று ஆண்டு காலமாக அதிபராகக் கடமையாற்றிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தீசுவராக் கல்லூரி அதிபராக மாற்றாலாகிச் சென்றமையை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றிய திருமதி.சிவந்தினி வாகீசன் B.Sc.(Hons) Dip.In Ed. ,SLPS-3 அவர்கள் பிரதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.சிவந்தினி வாகீசன் தமது தொடக்கக் கல்வியை வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையிலும் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் கல்வியியல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றவர்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியாகிய திருமதி.சிவந்தினி வாகீசன் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலையில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தவர் ஆவர். பாடவிதானச் செயற்பாடுகளுடன் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக் குழு பொறுப்பாசிரியராக இருந்து பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தமது பங்களிப்பினை வழங்கி வந்த ஒர் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியை ஆவார்.
இவர் கல்லூரியின் முன்னாள் உப-அதிபரும், கவிஞருமாகிய அமரர்.சி.பொன்னம்பலம் அவர்களின் பெறாமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாம் கல்வி கற்ற பாடசாலை மீதும் தாம் பிறந்து வளர்ந்த ஊர்மீதும் பற்றுக் கொண்டு அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வாழ்த்துவதுடன் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானையும் வேண்டுகின்றது.
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.”