தீவக வலயப் பாடசாலைகளின் அணிகளுக்கிடையே நடத்தப்பட்ட பெருவிளையாட்டுப் பொட்டிகளில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் ஏழு முதலிடங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கின்றது.
எமது பாடசாலையின் 15 வயது, 17 வயது, 19 வயது ஆண்கள், பெண்களின் அணிகள் சதுரங்கம், கரம், பட்மின்ரன், கரப்பந்து, உதைபந்து ஆகிய போட்டிகளில் வலயப் பாடசாலைகளின் அணிகளுடன் விளையாடியிருந்தது.
இப்போட்டிகளில் சதுரங்கப் போட்டிகளில் 3 முதலிடங்களையும், பட்மின்ரன் ஆட்டங்களில் 2 முதலிடங்களையும், கரம், கரப்பந்து ஆகியவற்றில் தலா 1 முதலிடத்தையும் எமது பாடசாலை அணிகள் பெற்றுள்ளன.
போட்டி முடிவுகளின் முழுமையான விபரத்தை இங்கே காணலாம்.
இப்போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்ற அணி வீரர்களையும், வீராங்கனைகளையும் பயிற்றுவித்த விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு. திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களையும் ஆதாரமாக இருந்து வழிநடத்திவரும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களையும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “தீவக வலயப் பெருவிளையாட்டு போட்டிகளில் ஏழு முதலிடங்களைப் பெற்று எமது கல்லூரி முன்னணியில்”