எமது சங்கத்தினை ஆரம்பிக்க முன்னின்று உழைத்தவரும் ஆரம்பகாலப் பொருளாளருமாகிய திரு.ஆறுமுகம் சோதிநாதன் அவர்களின் சகோதரரும் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரும் நிர்வாக சபை உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய karaihinducanada.com இன் நிர்வாகியாக பணியாற்றுகின்றவருமாகிய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களின் மைத்துனரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ஆறுமுகம் தில்லைநாதன் நேற்று திங்கட்கிழமை ஜேர்மனியில் சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா
மரண அறிவித்தல்
திரு.ஆறுமுகம் தில்லைநாதன்
(கொம்பாவோடை, களபூமி) (லிவர்குசன், ஜேர்மனி)
தோற்றம்: 18-01-1960 மறைவு: 13-03-2017
கொம்பாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் லிவர்குசன், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் தில்லைநாதன் அவர்கள் 13-03-2017 அன்று திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாதவி தில்லையம்பலம் கந்தையா மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், நிரஞ்ஜனி, பிரியந் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சோமசுந்தரம், மற்றும் கணேசன்(கோபால்), தனபாலன்(அவுஸ்ரேலியா), சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கனகாம்பிகை, சிவலட்சுமி, பானுமதி, கிருஷ்ணவேணி, கிருபானந்தன், வள்ளிநாயகி(ஆச்சி), பரமானந்தன்(கண்ணன், ஜேர்மனி), யோகேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வரும் வியாழக்கிழமை(16.03.2017) பிற்பகல் 5:00 மணி-8:00 மணி வரையும் Bergische Landstrabe 4-6, 51375 Leverkusen(Schlebusch) என்ற முகவரியில் அமைந்துள்ள Forst Bestattungshaus மண்டபத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் திங்கட்கிழமை(20.03.2017) மதியம் 12:00மணி-4:00 மணி வரையும் Manforter str184, 51373 Leverkusen என்ற முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
நாகேஸ்வரி (மனைவி) 011-49-214-25047
கணேசன் (கோபால், அண்ணா) 011-94-21-2211789
தனபாலன்(அண்ணா) 011-612-9863-8800
சோதிநாதன்(தம்பி) 905-790-9323, 647-838-9323
No Responses to “மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் தில்லைநாதன்”