காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பொதுக்கூட்டம் சென்ற 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு பதில் தலைவர் திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரம் அவர்களின் தலைமையில் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கொழும்புக் கிளை 25வது ஆண்டில் பாதம்பதித்திருக்கின்ற வரலாற்றுவேளையில் பிரபல தொழிலதிபர் நேசேந்திரம் அவர்களின் தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியேற்றுள்ளமை சிறப்பானதாகும். இப்பொதுக் கூட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பணிகள் குறித்து எடுத்துக் கூறியதுடன் இச்சங்கத்தின் பேருதவியுடன் பாடசாலை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்வதாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டு உரையாற்றினார். அதிபர் தமது உரையில் பாடசாலையின் முக்கியமான தேவைகளைத் தெரிவித்து அவை நிறைவேற்றி வைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறித்தினார். இப்பொதுக் கூட்டத்தில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளர் திரு.கனக சிவகுமாரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
செயலாளராக ஸ்ரீலங்கா கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஓய்வுநிலை பணிப்பாளர் நாயகம் Dr.ஆறுமுகம் சிவசோதி அவர்களும் பொருளாளராக கொழும்பு மாநகரசபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் திரு.நாகரத்தினம் கணநாதன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். நிர்வாக சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏனையோர் விபரம்:
உப-தலைவர்கள்: 1) திரு.K.அன்புச்செல்வன் 2) திரு.R.தர்மராசா
உதவிச்செயலாளர்: திரு.S.சண்முகபவன்
உதவிப்பொருளாளர்: திரு.K.பரமேஸ்வரன்
நிர்வாகசபை உறுப்பினர்கள்: திரு.S.மனோகரன்
திரு.T.ரவீந்திரன்
Dr.K.தவயோகராஜா
திரு.P.நாகராஜா
திரு.P.நாகரத்தினராஜா
திரு.N.விமலரூபன்
உள்ளக கணக்காய்வாளர்: திரு.P.விக்கினேஸ்வரன்.
நேசேந்திரம் அவர்களின் தலைமையிலான புதிய நிர்வாகம் காரை.இந்துவின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கும் என நம்புவதுடன் அதனை வாழ்த்துவதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பேருவகையடைகின்றது.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “காரை.இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் நிர்வாகம் தொழிலதிபர் சி.நேசேந்திரம் தலைமையில் அமையப்பெற்றுள்ளது.”