காரை இந்துவின் பாரதி நடராசா சயம்பு தியாகராசா ஆகிய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுனர் போட்டி சென்ற 02-03-2013 ல் கல்லூரியின் தனித்துவமான பாரம்பரிய நடைமுறைகளுக்கமைய வெகு சிறப்பாக ஓழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றிருந்தது. இவ்pளையாட்டுப் போட்டியை கண்டுகழிக்க பெற்றோர்களும் பழைய மாணவர்களும்; விளையாட்டு ரசிகர்களும் என ஆயிரக்கணகில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் அரங்கில் கூடியிருந்து விறுவிறுப்புடன் நடந்த மாணவர்களின் போட்டி நிகழ்சிகளை கண்டு கழித்ததுடன தமது பிள்ளைகளின் வெற்றிக்கழிப்பில் பல பெற்றோர்கள் பங்கு கொண்டதையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
.கல்லூரியின் அதிபராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற முதலாவது முக்கியமான நிகழ்வு என்ற வகையிலும் கல்லூரி 125வது ஆண்டில் காலடி பதிக்கின்ற வேளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு என்ற வகையிலும் இம்மெய்வல்லுனர் போட்டி மிகுந்த முக்கியத்துவம் உடையதாக அமைந்திருந்தது.
தீவக வலய கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவரது துணைவியார் திருமதி விஜிதா குயின்ரஸ் ஆகியோர் பிரமத விருந்தினர்களாகவும் தனியார் காப்புறுதி நிறுவனமென்றின் பிராந்திய முகாமையாளர் திரு.கோ.சிறீவரதன் அவரது துணைவியார்; திருமதி.வைஷ்ணவி சிறீவரதன் ஆகியோரும் காரைநகர் கோட்ட கல்வி அதிகாரி திரு.பி.விக்கினேஸ்;வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகவும் கல்லூரியின் முன்னாள் அதிபர்களான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை திரு.கா.குமாரவேலு ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு விளையாட்டு விழாவினை சிறப்பித்தி;ருந்தனர். திரு.கோ சிறீவரதன் இம்மெய்வல்லுனர் போட்டிக்கான அனுசரனையினை வழங்கி ஊக்கிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “விளையாட்டு இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுனர் போட்டி”