மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களது முழுமையான அனுசரணையில் சென்ற 4ஆம் திகதி நடைபெற்ற பரிசளிப்பு தினத்தின்போது மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் சிறப்பு விருதுகளாக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையுள்ள மாணவர்களிற்கான பொதுத் தகமைத் திறன் விருதுகள், க.பொ.த.சாதாரணம், க.பொ.த.உயர்தரம் ஆகிய தேசியப் பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்றோர்களிற்கான விருதுகள், பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களிற்கான விருதுகள், கல்விசாரா செயற்பாடுகளில் சாதனை ஏற்படுத்தியோருக்கான விருதுகள் ஆகியன வழங்கப்பட்ட அதேவேளை சிலர் முன்வந்து தமது அன்புக்குரியவர்களின் நினைவாக உதவிய ஞாபகார்த்தப் பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.
பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களான திருமதி மனோன்மணி தம்பிராசா, திரு.திருமதி சச்சிதானந்தன் சுந்தரேஸ்வரி தம்பதியினர், திரு.கனக சிவகுமாரன் ஆகியோர் தமது அன்பக்குரியவர்களின் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசில்களை கடந்த பத்து ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர். அதேவேளை சங்கத்தின் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவரான தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் தமது ஆசிரியரின் நினைவாக சென்ற மூன்று ஆண்டுகளாக ரொக்கப் பரிசில்களை வழங்கி வருகின்றார்.
அத்துடன் கல்லூரியின் அதிபரான திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களும் ஜெர்மனியில் வதியும் திரு.அருள்முகன் சாயிபாபா, ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் திரு.பிரேம்தாஸ்குமாரசிறீ, திருமதி வீரமனோகரி ஸ்டாலினா கோபிச்சந்திரன் ஆகியோரும் இம்முறை ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
காரை.இந்துவின் முன்னாள் உப-அதிபரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவரும் சங்கத்தின் ஆரம்பகாலத் தலைவருமாகிய அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது மனைவியும் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்கள் வழங்கிய உதவியை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தியைப் பெற்றுக்கொண்ட ஏழு மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
முதலிகேணியடி, காரைநகரைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தமாக சங்கீதத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளவர்களும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுமான அன்னாரது புதல்வனும் மருமகளும் ஆகிய திரு.திருமதி சச்சிதானந்தன் சுந்தரேஸ்வரி தம்பதியினர் வழங்கிய உதவியை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் A தர சித்தியைப் பெற்ற இருவர் பெற்றுக்கொண்டனர்.
அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும் கல்லூரி ப் பண்ணை இயற்றி இசையமைத்தவருமாகிய அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களது ஞாபகார்த்தமாக அன்னாரது புதல்வனும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினருமாகிய திரு.கனக சிவகுமாரன் வழங்கிய உதவியை சென்ற கல்வியாண்டின் சிறந்த மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டார்.
அமரர் சிதம்பரம் குமாரவேலு ஞாபகார்த்தப் பரிசு
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவரான தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது ஆசிரியரான அமரர் சிதம்பரம் குமாரவேலு ஞாபகார்த்தமாக நிரந்தர வைப்பிலிட்டு ஏற்படுத்திய உதவித்திட்டம் ஊடாக வழங்கிய ரொக்கப் பரிசிலை க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் பாடங்களில் A தரத்தில் சித்தியடைந்த இருபது மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
அமரர் அஞ்சனாதேவி வைரமுத்து ஞாபகார்த்தப் பரிசு
காரை.இந்துவின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியையுமாகிய அமரர் அஞ்சனாதேவி வைரமுத்து ஞாபகார்த்தமாக அன்னாரது பெறாமகனும் கல்லூரியின் அதிபருமாகிய திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் வழங்கிய உதவியை க.பொ.த.பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் A தர சித்தியைப் பெற்ற் இரண்டு மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
அமரர் அ.க.ந.விஜயரத்தினம் ஞாபகார்த்தப் பரிசு
பிரபல முன்னாள் ஆங்கில ஆசிரியரான அமரர் அ.க.ந.விஜயரத்தினம் அவர்களது ஞாபகார்த்தமாக அன்னாரது புதல்வனான ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் திரு.பிரேம்தாஸ்குமாரசிறீ அவர்கள் வழங்கிய உதவியை க.பொ.த.உயர் தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தில் சித்திபெற்ற நான்கு மாணவர்கள் பெற்றக்கொண்டனர்.
அமரர் விஜயரத்தினம் சிவயோகம் ஞாபகார்த்தப் பரிசு
முன்னாள் ஆங்கில ஆசிரியையும் ஓய்வுநிலை அதிபருமாகிய அமரர் விஜயரத்தினம் சிவயோகம் அவர்களது ஞாபகார்த்தமாக அன்னாரது புதல்வி திருமதி வீரமனோகரி ஸ்டாலினா கோபிச்சந்திரன் வழங்கிய உதவியை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் வரலாறு பாடத்தில் A தர சித்தியைப் பெற்ற நான்கு மாணவர்களும் தமிழ்மொழியில் A தர சித்தியைப்பெற்ற ஆறு மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.
அமரர் ஜோன் மனோகரன் கென்னடி ஞாபகார்த்தப் பரிசு.
சிறந்த கல்விமானும் சமூகச் செயற்பாட்டாளருமாகிய அமரர் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களது ஞாபகார்த்தமாக அன்னாரது சகோதரன் திரு.அருள்முகன்சாயிபாபா வழங்கிய உதவியை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தில் A தர சித்தியைப் பெற்ற இருவர் பெற்றுக்கொண்டனர்.
No Responses to “காரை.இந்துவின் பரிசளிப்பு தினத்தின்போது ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி உதவியோர்.”