கல்வியறிவில் சிறந்து விளங்கும் காரைநகர் மக்கள் எதனை இழந்தாலும் கல்வியை இழக்காதவர்கள். இருந்தாலும் இன்னமும் எழுத்தறிவு, எண்ணறிவு ஆகிய அடிப்படை கல்வியறிவு குறைந்த மாணவர்களும் எமது ஊர் பாடசாலைகளில் கற்று வருகின்றார்கள் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறான மாணவர்களை இனம் கண்டு சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த அவுஸ்ரேலியா காரை கலாச்சார மன்றம் முன்வந்துள்ளது.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில் தரம் 6 முதல் தரம் 8 வரையான வகுப்புக்களில் தமிழ் எழுத்தறிவில் மேலதிக பயிற்சியளிக்கப்பட வேண்டிய 40 மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வகுப்புகள் பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் வாராந்தம் நடைபெற்று வருகின்றன. ஒரு நாளுக்கு இரண்டு மணித்தியாலங்கள் நடத்தப்படும் இவ்வகுப்புகள் 15 நாட்களுக்கு நடைபெற உள்ளன.
இச்சிறப்புப் பயிற்சிநெறிக்கான நிதியுதவியை அவுஸ்ரேலியா காரை கலாச்சார மன்றம் வழங்குகின்றது. இதன் முதற்கட்டமாக ரூபா36,000ஃஸ்ரீ ஐ மேற்படி மன்றம் பாடசாலையின் பழைய மாணவாகளின் தாய்ச் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
“Give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime” என்ற வாசகத்திற்கிணங்க அவுஸ்ரேலியா காரை கலாச்சார மன்றம் காரைநகர் பாடசாலைகளைச் சேர்ந்த 130 வரையான க.பொ.த. சா-த, க.பொ.த உ-த மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபா வரையிலான புலமைப் பரிசில்களை கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கி வந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “மொழியாற்றல் குறைந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் அவுஸ்ரேலியா காரை கலாச்சார மன்றம் நிதியுதவி”