எமது கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.க.சிவபாதசுந்தரம், திருக. ஈஸ்வரபாதம் ஆகியோரின் அன்புத்தாயாரும் எமது கல்லூரியின் பழைய மாணவியுமான திருமதி.பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எமது கல்லூரிச் சமூகம் ஆழ்ந்த துயரடைகின்றது.
அன்னாரின் புதல்வர்களான திரு.க.சிவபாதசுந்தரம அவர்கள் எம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடா கிளை நிர்வாக சபை உறுப்பினராக செயற்பட்டு சங்கம் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை சங்கத்தினூடாக எமது பாடசாலை முன்னேற்றத்திற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கி வருகி;ன்றார். அத்துடன் அன்னாரின் இளைய புதல்வரான திரு.க. ஈஸ்வரபாதம் அவர்கள் அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராக செயற்பட்டு எமது கல்லூரியின் மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக கடந்த இருவருடங்களாக தாமாகவே எம்முடன் தொடர்பு கொண்டு சங்கத்தினூடாக நிதியுதவிகளை நல்கி வந்துள்ளார். மேலும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட திறமையான க.பொ.த.(உயர்தரம்) கற்கும் மாணவர்களுக்கு சங்கத்தினூடாக புலமைப்பரிசில் நிதிகளை வழங்குவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டார். அத்துடன் நின்றுவிடாது, கல்லூரியன்னை மீது கொண்ட பற்றுறுதி காரணமாக தான் பாடசாலையைத் தரிசித்தபோது பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பொலிவிழந்து காணப்பட்ட சரஸ்வதி சொரூபம் மற்றும் நந்திதேவர்களுக்கும் தனது சொந்தச் செலவில் வர்ணம் தீட்டுவித்தார்.
அவ்வகையில் அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாடசாலைச் செயற்பாடுகள் உயர்ச்சி பெறவும், சாதனை படைக்கவும் பல்வேறு வகைகளிலும் தம்மாலான ஒத்துழைப்புகளை எமக்கு வழங்கி வருகின்றார்கள். அத்தகைய நன்றியுணர்வுடைய சீரிய நற் புதல்வர்களைப் பெற்றெடுத்த அன்னை இப்பூவுலகை விட்டுப் பிரிவடைந்தமையால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்ப உறவினர்களுடன் இணைந்து எம்கல்லூரிச் சமூகமும் கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்குவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
கல்லூரிச் சமூகம் சார்பாக,
அதிபர்
(திருமதி வா.தவபாலன்)
யா-கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
காரைநகர்
No Responses to “அமரர். திருமதி.பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பாடசாலை சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி”