எமது சங்க உறுப்பினர் திருமதி அன்னலட்சுமி மனோகரன் அவர்களின் அன்பு கணவரும் மற்றொரு உறுப்பினர் திரு.அரியரத்தினம் மனோகரன் அவர்களின் அன்புத் தந்தையும் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் அமரர் நாகநாதர் வேலுப்பிள்ளை (ஐயம்பிள்ளை மாஸ்டர்) அவர்களின் அன்பு மருமகனும் காரை.இந்துவின் முன்னாள் நூலகர் அமரர் திருமதி தேவமங்கை பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆகிய திரு.இராமலிங்கம் மனோகரன் (ஓய்வுநிலை பிரதம முகாமையாளர்,R.V.G.Tobacco Company) அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை சம்பந்தர்கண்டி காரைநகரில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம் கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”