காரை.இந்துவின் பிரபல்யம் மிக்க முன்னாள் ஆசிரியரான அமரர் வி.சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மகளும் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையில் செயலூக்கம் மிக்க நிர்வாகசபை உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியிருந்தவரான ஓய்வுநிலை தபாலதிபர் கலைமாமணி (அமரர்)ஆறுமுகம் முருகேசு அவர்களின் அன்பு மனைவியும் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையான அமரர் திருமதி பரஞ்சோதியம்மா (பரஞ்சோதி ரீச்சர்) அவர்களின் அன்புச் சகோதரியும் காரை.இந்துவின் பழைய மாணவியுமாகிய திருமதி சிவசோதியம்மா முருகேசு அவர்கள் 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ள மரண அறிவித்தல் பின்னே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”