எமது நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றம் தமது பொதுக் கூட்டத்தினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்த விரும்பியுள்ளதால் அதே தினத்தில் நடைபெறும் என எம்மால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் பின்போடப்பட்டு மே மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதை சங்கத்தின் பொதுக் சபை உறுப்பினர்களுக்கு அறியத்தருகின்றோம்.
இக்கூட்டம் குறித்த நிகழ்ச்சி நிரலுடன் கூடிய விபரமான அறிவித்தல் விரைவில் அறியத்தரப்படும் என்பதுடன் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கைஇ செயற்பாட்டு அறிக்கை என்பன சங்க உறுப்பினர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் -கனடா
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொதுக் கூட்டம் பற்றிய அறிவித்தல்”