நடப்பாண்டில் காரைநகர் இந்துக் கல்லூரியின் பல்வேறு அவசிய தேவைகளை நிறைவு செய்யவும் கற்றல்இ கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளை மேம்படுத்துவதில் ஏற்படக்கூடிய செலவீனங்களை ஈடுசெய்யவும் என மொத்தம் மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது. தாய்ச் சங்கத்தின் பின்வரும் கோரிக்கைகளே கனடாக் கிளையின் நிர்வாக சபையினால் ஆராயப்பட்டு உதவி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டவையாகும்.
1.அலுவலக உதவியாளரின் மாதாந்த வேதனம்
2.இலத்திரனியல் நூலகம் மற்றும் பொது மின் பாவனைக்கான கட்டணம்
3.விருந்தினர் உபசரணை
4.நானாவித செலவுகள்
5.ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
6.Wi-Fi இணைய சேவைக் கட்டணம்
7.க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்குத் தேவையான கற்றல் உபகரணங்கள்
8.க.பொ.த.(சாதாரணம்)இ க.பொ.த.(உயர்தரம்) ஆகிய பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கல்
குறித்த உதவித் தொகை தாய்ச் சங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வுதவியை வழங்கியமைக்காக தாய்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் கல்லூரியின் பிரதி அதிபருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினைப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பழைய மாணவர் சங்கத்தின் உதவியைத் தவிர சங்கத்தின் உறுப்பினர் திரு.S.P.அரிகரன் அவர்கள் தமது தந்தையாரான அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கவும் இப்பரிசில் வழங்கும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கவும் ஐம்பதினாயிரம் ரூபாவினை எமது சங்கத்தினூடாக அனுப்பிவைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No Responses to “காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது”