கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் இளைப்பாறிய பிரதி அதிபரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவருமான திரு.சின்னத்தம்பி தம்பிராஜா அவர்ளின் மறைவு குறித்து கல்லூரியில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
மேற்படி அஞ்சலிக் கூட்டம் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தல் புதன்கிழமை (24.07.2013) அன்று நடைபெற்றது.
கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் பண்டிதர்.திரு.மு.சு.வேலாயுதபிள்ளை, யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் செயலாளாரும், கிராம சேவையாளருமான திரு.இ.திருப்புகழுர்சிங்கம் மற்றும் கல்லூரி ஆசிரியர்களான திருமதி.சர்வதயாபரி குலகுருநாதன், திருமதி.பத்மலீலா அமிர்தசிங்கம் திரு.நா.கேதாரநாதன் ஆகியோர் மேற்படி அஞ்சலிக் கூட்டத்தில் இரங்கல் உரை நிகழ்த்தியிருந்தனர்.
திரு.சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களுடன் இணைந்து கல்விப் பணியாற்றிய கால நினைவுகளையும் அன்னாரின் அளவில்லாத ஊர்ப்பற்றையும் மறக்க முடியாத நற்குணங்களையும் தமது இரங்கல் உரையில் குறிப்பிட்டிருந்தனர்.
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் இளைப்பாறிய பிரதி அதிபரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவருமான திரு.சின்னத்தம்பி தம்பிராஜா அவர்ளின் மறைவு குறித்து கல்லூரியில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது”