காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது. அன்றைய தினம் மழைநாள் என முன்னதாக அறிவிக்கப்பட்டு அதிகாலை முதல் மழை பெய்து கொண்டிருந்து அசௌகரியமான சூழ்நிலை நிலவிய போதிலும் தொடர்பு மிக்க உறுப்பினர்கள் உள்ளி;ட்டு முப்பத்தொன்பது உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது பாடசாலை மீதான விசுவாசத்தினை வெளிப்படுத்தியிருந்தமை சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும். திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் தேவாரம் பாடியதைத் தொடர்ந்து கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன; திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடிப் பதிவுசெய்யப்பட்டிருந்த கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டிருந்ததுடன் பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களது மறைவிற்கு இரு நிமிடநேரம் அக வணக்கமும் செலுத்தப்பட்டது.
செயலாளரினால் முன்னைய பொதுக் கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் தலைமையுரையினை நிகழ்த்தினார். செயலாளர் திரு.கனக சிவகுமாரன் அவர்களினால் 2016ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையும் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களினால் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர் பொதுச் சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. ஜனவரி1 2017தொடக்கம் யூன்3 2017 வரைக்கும் உள்ள காலப் பகுதிக்கான இடைக்கால வரவு-செலவு அறிக்கையும் தகவலுக்காக பொருளாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
காணிக்கொள்வனவின் பொருட்டு சேகரிக்கப்பட்ட பணத்தில் இரண்டரைப் பரப்புக் காணி கொள்வனவு செய்வதற்கு உதவிய தொகையைத் தவிர்த்து மீதமாகவுள்ள பணத்தினை காணிக் கொள்வனவிற்கான தேவையேற்படும் வரைக்கும் வங்கியொன்றில் வைப்பிலிட்டு வைப்பது குறித்து நிர்வாக சபை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களின் ஆலோசனையை பொதுச் சபை ஆமோதித்தது.
சென்ற பொதுக் கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்டிருந்த கணக்காய்வாளர் திரு.த.பரமானந்தராசா தனிப்பட்ட காரணங்களினால் பதவி விலகியதைத் தொடர்ந்து திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்கள் நிர்வாகத்தினால் தற்காலிக கணக்காளராக நியமனம் செய்யப்பட்டதை பொதுச் சபை அங்கீகரித்தது. உறுப்பினர்களுக்கான நேரத்தின்போது பல உறுப்பினர்களும் முன்வந்து பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து நல்ல பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். பெரும்பாலான உறுப்பினர்களும் பாடசாலையின் கல்வித் தரத்தினை மேபடுத்தும் வகையில் கற்றல்இ கற்பித்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு அவை ஊக்குவிக்கப்படல்வேண்டும் என்பதை வலியுறித்தியிருந்ததுடன் அவை குறித்த திட்ட ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.
போசகர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம், முன்னாள் தலைவரும் கணக்காய்வாளருமாகிய திரு.மு.வேலாயுதபிள்ளை, சங்கத்தின் தொடர்பு மிக்க உறுப்பினரும் வாட்டலூ பல்கலைக்கழக இணைப்பேராசிரியருமான கலாநிதி த.ரவிச்சந்திரன, உப-தலைவர் திரு.நா.குஞ்சிதபாதமஇ; முன்னைநாள் உப தலைவர் திரு.சி.சச்சிதானந்தம்இ முன்னாள் பொருளாளரும் தற்போதய உதவிப் பொருளாளருமாகிய திரு.ந.பிரகலாதீஸ்வரன், முன்னாள் கணக்காய்வாளர் திரு.த.பரமானந்தராசா, S.P.சுப்பிரமணியம் நினைவு ஊக்குவிப்புத் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.எஸ்.அரிகரன் ஆகியோர் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்து உரையாற்றியிருந்தனர். உறுப்பினர்களது ஆக்கபூர்வமான கருத்துக்களும் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் பதிலளித்தார்
பாடசாலையின் அதிபராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற திருமதி வாசுகி தவபாலனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினைப் பாராட்டி திரு.கனக சிவகுமாரனினால் முன்மொழியப்பட்டிருந்த தீர்மானத்தினை பொதுச்சபை கரகோசம் செய்து ஏகோபித்து வரவேற்றிருந்தது. அர்ப்பணிப்பும் நிர்வாகத் திறனும் மிக்க கல்லூரியின் இரண்டாவது பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட இவரது சேவைக் காலத்தில் கல்லூரியின் கல்விஇ கல்விசாராச் செயற்பாடுகளில் அனைத்து மட்டங்களிலும் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டு கல்லூரியின் புகழ் மேலோங்கியதாக திரு.கனக சிவகுமாரன் வழங்கிய பாராட்டுரையில் குறிப்பிட்டதுடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவிகள் சார்ந்து அவர் வழங்கியிருந்த திருப்திகரமான சிறந்த ஒத்துழைப்பினையும் வெகுவாகப் பாராட்டினார்.
செயலாளர் கனக சிவகுமாரன் நன்றியுரை வழங்கிய பின்னர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் தேவாரத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த மதிய போசனத்திலும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
No Responses to “பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து பயனுள்ள வகையில் அமைந்திருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம்”