கலாநிதி ஆ.தியாகராசா மத்தியமகா வித்தியாலயம் தனது தளர்விலாத கல்விப்பணியில் 125 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற வரலாற்றுச சாதனையினை கல்லூரி அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழும் வகையிலும் உலகெங்கும் பரந்து வாழும் அன்னையின் புதல்வர்கள் பேருவகை கொள்ளும் வகையிலும் பெரு விழாவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலைச் சமூகம் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி நிறைவுசெய்துள்ளது.
ஆகஸ்டு 01ஆம் திகதி காலை மாலை என இரு அமர்வுகளிலும் ஆகஸ்டு 02ஆம் திகதி காலை மூன்றாவது அமர்விலுமாக நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.;கொண்டாட்டத்த்pன் இதயம் என கருதப்படும் முக்கிய நிகழ்வுகள்hன நிறுவனர் தினமும் சிறப்பு மலர் வெளியீடும் ஆகஸ்டு 01ஆம் திகதி காலை கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இவ் அமர்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் கனடா ரொறன்ரோவில் பிரபல குழந்தை வைத்திய நிபுணராக பணிபுரிபவரும் கனடா வாழ் காரைநகர் மக்களின் நன்மதிப்புக்குரியவராக விளங்குகின்றவருமாகிய வைத்திய கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.பழைய மாணவர் சங்க கனடா கிளை உறுப்பினரான வைத்திய கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதையிட்டு சங்கம் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியுமடைகின்றது.
முதலாம் நாளின் மாலை அமர்வு கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவாக அமைக்கப்பட்டுள்ளதுடன் இவ் அமர்வின் பிரதம விருந்தினராக வட மாகாண கல்விப்பணிப்பாளர் உயர்திரு.வ.செல்வராசா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இரண்டாம் நாள் காலை மூன்றாவது அமர்வு கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் கலை விழாவாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்hண பல்கலைக் கழக பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ச.சத்தியசீலன் அவர்களும் யாழ் பல்கலைக்கழக கல்வியியற்துறை தலைவர் கலாநிதி திருமதி அ.சத்தியசீலன் அவர்களும் இவ் அமர்வின் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
மூன்று அமர்வுகளிலும் கலந்து சிறப்பிக்கவுள்ள எனைய விருந்தினர்கள் பற்றிய விபரத்தை பின்னே உள்ள விழா அழைப்பிதழில் பார்வையிடலாம்.
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு பூர்த்தியினை பெரு விழாவாக கொண்டாடி கல்லூரி அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ தயாராகும் பாடசாலைச் சமூகம்”