கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டட்டத்தின் முதலாம் நாளின் இரண்டாம் அமர்வில் ஒழுங்கமைக்கப்பட்டள்ள வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்குகின்றது.இதன்பொருட்டு ஒரு இலட்சம் ரூபாவினை தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு கனடா கிளை அனுப்பிவைத்துள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அமரர் தம்பிராசா அவர்கள் அமரத்துவமடைவதற்கு முன்பாக வழங்கியிருந்த முப்பதாயிரம் ரூபா க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையில் சங்கீதத்தில் A, B தர சித்தி பெற்ற மூவருக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் பரிசளிக்க மேலதிகமாக உதவப்பட்டுள்ளது.அமரர் தம்பிராசா மாஸ்டர் தாம் கணித பாடத்தில் பெயர்பெற்ற ஆசிரியராக விளங்க மூலகாரணமாகவிருந்து தமக்கு கணிதபாடத்தினை கற்பித்த அமரர் மு.அம்பலவாணர் அமரர் க.வே.நடராசா ஆகிய இரு ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து அவர்களது நினைவாக இச்சிறப்ப பரிசலினை வழங்கியுதவியுள்ளார்கள்
பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உறுப்பினர்களான திரு.சுப்பிரமணியம் சச்சிதானந்தம் திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தம் குடும்பத்தினர் க.பொ.த.(உயர்தரம்) பரீட்சையில் முறையே A,B தர சித்திபெற்ற இருவருக்கு தலா ஜயாயிரம் ரூபா வீதம் பரிசில் வழங்க பத்தாயிரம் ரூபாவினை உதவியுள்ளனர். வலந்தலையைச் சேர்ந்த தமது தாயாரும் மாமியாருமாகிய அமரர் திருமதி சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்களது நினைவாக சங்கீதத்திற்கான இவ்விசேட பரிசில்தொகை திரு.திருமதி சச்சிதானந்தம் குடும்பத்தினரால் உதவப்பட்டுள்ளது.
No Responses to “125வது ஆண்டு விழாவின் ஓர் அங்கமான பரிசளிப்பு விழாவிற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்குகின்றது”