கலாநிதி அ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான முதன்மை அனுசரணையாளராக கனடாவில் குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் விளங்குகின்றார். மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவர் என்பதுடன் கனடா ரொறன்ரோவில் சேவை உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் குழந்தைகள் மருத்துவ சேவையினை ஆற்றிவருவதன் மூலம் கனடா வாழ் தமிழ் பெற்றோர்களின் நன்மதிப்பினைப் பெற்றவராகவுள்ளார். ஊர்ப்பற்றும் சமூகசிந்தனையும் கொண்ட இவர்மீது கனடா வாழ் காரைநகர் மக்கள் மிகுந்த மதிப்பும் அன்பும் வைத்துள்ளார்கள்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை உறுப்பினரான மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் தமது அனுசரணைக்கான உதவியினை இவ் அமைப்பினூடாக வழங்கியிருப்பதுடன் கல்லூரியின் முன்னேற்ற பணிகளில் மிகுந்த அக்கறையுடன் பங்குகொண்டுவருபவராவார். கல்லூரியின் மேம்பாட்டில் அக்கறையுடன் பங்குகொண்டுவருகின்ற மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களிற்கு கல்லூரிச் சமூகம் நன்றியை தெரிவிக்கின்றது.
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான முதன்மை அனுசரணையினை கனடாவின் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் வழங்குகின்றார்”