எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் பழைய மாணவனும், வாழ்நாள் பேராசிரியருமான திரு வே. தர்மரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும், நிறுவுனர் தின உரையை நிகழ்த்துவதற்காக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
1. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான பொதுத் தகைமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
2. ஆங்கிலத்துறை சார் தேர்ச்சி விருது
3. மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள்
4. 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்
5. 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்
6. 2016ம் ஆண்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள்
7. 2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் என்பன வழங்கப்பட்டது.
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 4 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :
1.அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
2.அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திரு. திருமதி. சச்சிதானந்தன் சுந்தரேஸ்வரி தம்பதிகளினால் அவர்களின் அன்புக்குரிய தாயார்(மாமியார்) திருமதி. அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் திறமைத் தேர்ச்சி பெற்ற செல்வன் ப. மகீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
3.அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரிய தந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டின்
• சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருது செல்வன் ப. பிரசாந் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
• சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருது பின்வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
*செல்வி கே. லாவண்யா
*செல்வி ந. ஜஸ்மினா
* செல்வி கி. சுதர்சனா
• 2016ம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 3ம், 4ம் இடங்களைப் பெற்ற மாணவன் செல்வன் சி. கோகுலனுக்கு வழங்கப்பட்டது.
4.அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் இ. பவானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருதாக அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் “A” தரப் பெறுபேறு பெற்று தொடர்ந்தும் இக் கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருதாக எமது பாடசாலையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அமரர் R. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக திரு கந்தையா சிவகுமாரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது திரு தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, தனி நடனம், நாட்டிய நாடகம் – தசாவதாரம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு தெ. லிங்கேஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017”