125வது ஆண்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துரைக்கும். யாழ்/காரைநகர் ஆ.தியாகராஜா மத்திய மாகவித்தியாலயம் (யா/காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவனும், சுவிஸ் காரை அபிவிருத்தி சபைத் தலைவருமாகிய திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா (பாபு)
அதிபர் அவர்களே
ஆசிரியப் பெருமக்களே
இலங்கும் மாணவச் செல்வங்களே – உம்மை
ஈன்றெடுத்த பெற்றோரே
உமக்கு இன்று திருவிழா – எமது
ஊருக்கு என்றும் பெருவிழா
எல்லோரும் நல்லவரே
ஏனெனில் கல்வி பொதுவானதே
ஐயம் உள்ளதோ -இல்லை
ஒன்றுபடுவது நல்லதோ
ஓம் என்று சொல்லுங்கள் – எமக்கு
ஒளடதம் தான் ஒருமைப்பாடு
ஃது அன்றி வாழ்வில் – எமக்கு
ஏது மேம்பாடு
கண் எனில் பெயர்
காண் என்பது வினை
கிளவி எனில் சொல்
கீணம் என்பது குறை
குணம் எனில் இயல்பு
கூபம் என்பது கிணறு
கெண்டை எனில் மீன்
கேசிரம் என்பது சிங்கம்
கைதை எனில் வயல்
கொச்சு என்பது குஞ்சம்
கோரன் எனில் சிவன்
கௌனி என்பது நூறு வெற்றிலை கொண்ட கட்டு
விழாவுக்கு வருவோருக்கு வெற்றிலை கொடுத்து
வரவேற்பது நம் தமிழர் பண்பாடு
கல்லூரியின் பழைய மாணவன் என்பதனால்
மகிழ்ச்சியில் எழுதுகின்றேன்
நாம் அந்நிய நாடுகளில் வாழ்ந்தாலும்
உங்களை மறப்பதில்லை
To Thine Ownself be True எனும் கல்லூரியின்
வாசகத்தையும் மறப்பதில்லை
அதிபர் A.தியாகராசாவின் காலத்தில் மாணவனாக இருந்தவனும்
சோமாஸ்கந்தன் மாஸ்ரர் காலத்தில் தொண்டராக இருந்தவன்
பூபாலபிள்ளை விவேகானந்தா
Thunstrasse 82
3600 Burgdorf
Switzerland.
No Responses to “125 வது ஆண்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துரைக்கும். சுவிஸ் காரை அபிவிருத்தி சபைத் தலைவரும் பழைய மாணவருமாகிய திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா (பாபு)”