பண்டிதை செல்வி யோகா சோமசுந்தரம்
ஓப்பற்ற சைவப்பெரியார் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தொடக்கி வைத்த மகத்தான செயற்பாடு அவர் இட்ட விதை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என்கின்ற நாமத்தில் பெருவிருட்சமாக நிழல்பரப்பி அந்நிழலில் அனைவரும் ஒன்று திரண்டு நிற்பதற்கு காரணமாயிற்று.
செயற்கரிய செயலைப்புரிந்து காரைநகர் மக்களின் கல்விக் கண்ணை திறந்து ஒளியூட்டிய அமரர் முத்து சயம்பு அவர்கள் என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியவராவார். அவரால் உருவாக்கப்பட்ட கல்லூரி இன்று 125வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில் காரை இந்துவின் புதல்வர்களும் காரைநகர் மக்களும் பல்வேறு வழிகளிலும் முத்து சயம்பு அவர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
கல்லூரியின் முன்னாள் ஆசிரியை பண்டிதை செல்வி யோகா சோமசுந்தரம் அவர்கள் முத்து சயம்பு அவர்களின் பணியினை வியந்து யாத்த கவிதை ஒன்று இங்கு எடுத்து வரப்படுகிறது.
சயம்பர் என்ற முத்து
சயம்பர் என்ற முத்து
அயனாய் வந்த முத்து
இயம்பும் காரை மண்ணில்
நயந்து ஆங்கிலந் தன்னை
வியந்து கற்பித்த செம்மல்
ஆண்டு ஆயிரத் தெண்ணூற்
எண்பத் தெட்டில் காரை
மண்ணில் களம் பதித்தார்
மண்ணும் பயன் பெற
மக்களும் பயன் பெற்றனர்
தக்க சமயத்தில் இட்ட விதை
மிக்க நிழல் பரப்பி
விருட்சமாய் செழித்து வளர்ந்து
பெருமையை பறை சாற்றுதே
உரிமையாய் சயம்பர் தன்னை
அருமையாய் பேணிப் போற்றுவோம்
வளர்க கல்விச் சமூகம்
தளர்வு என்றும் நீங்குக
தொடர்க கல்விப் பணிகள்
விடாது முயற்சி பெருக
வல்ல சிவனார் அருளால்
நல்லதே நாளும் நடக்கும்
மலர்க அமரர் புகழ்
பண்டிதை செல்வி யோகா சோமசுந்தரம் (முன்னாள் ஆசிரியை
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்(காரைநகர் இந்துக்கல்லூரி)125வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில் நிறுவனர் முத்து சயம்பு நினைவு கூரப்பட்டு வருகின்றார்”