காரை.இந்துவின் ஆசிரியர் தின விழா சென்ற 6-10-2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 8.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றபோது அறிவு என்னும் ஞான ஒளியினை மாணவர்களுக்கு ஊட்டுகின்ற மகத்துவம் மிக்க சேவையினை வழங்கும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
இவ்விழாவின் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் இசை ஆசிரியையுமாகிய திருமதி உருத்திரசிங்கம் தேவமனோகரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
முன்னாள் அதிபரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.S.K.சதாசிவம் அவர்கள் ஆசிரியர் தின உரையினை சிறப்பாக நிகழ்த்தியிருந்தார். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் அனைவருக்கும் குடை நினைவுப் பரிசிலாக வழங்கப்பட்டிருந்தது. மாணவர்கள் சிறந்த கலை நிகழ்வுகளை வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியுற வைத்தனர்.
கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்கின்ற ஆசிரியை திருமதி கமலாவதி லிங்கேஸ்வரன் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வும் இவ்விழாவின் இடையே ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் சார்பில் நடைபெற்றிருந்தது. தீவக வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் திரு.பா.பாஸ்கரன் அவர்களும், ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்துகொண்டு சேவை நயப்புரையினை வழங்கினர். திருமதி கமலாவதி லிங்கேஸ்வரன் அவர்களுக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பிலும் அன்பளிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மதியபோசன விருந்திலும் விருந்தினர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு அகமகிழ்ந்திருந்தனர்.
ஆசிரியர்களின் மகத்துவம் மிக்க அர்ப்பணிப்பான சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு உதவியளிக்கப்படல்வேண்டும் என்கின்ற பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கொள்கைக்கு ஏற்ப விழாவுக்கான பிரதான அனுசரணையினை சங்கத்தினர் 9வது ஆண்டாக வழங்கியிருந்த அதேவேளை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசிலாக குடைகளை வழங்குவதற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவிச் செயலாளரும் முன்னாள் கட்டுமான பகுப்பாய்வாளருமாகிய (Former Quality Control Inspector, Electrical) திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்கள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கீழுள்ள இணைப்பினை அழுத்தி விழாத் தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிடலாம்.
https://photos.app.goo.gl/jpzu7McQg7uhzG9VA
கீழுள்ள இணைப்பினை அழுத்தி திருமதி கமலாவதி லிங்கேஸ்வரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு நிகழ்வின் புகைப் படங்களைப் பார்வையிடலாம
https://photos.app.goo.gl/91RxunwvEfPh3VCm6
No Responses to “காரை.இந்துவில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டிருந்த ஆசிரியர் தின விழாவும் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வும்.”