நேற்றைய தினம் கனடா பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டத்தில் திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் பதினொருபேரைக்கொண்ட புதிய நிர்வாக சபை அமையப்பெற்றுள்ளது.
காரை.இந்துவின் பழைய மாணவரும் பின்னர் அப்பாடசாலையிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவரும் சைவத் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியதன் மூலம் காரைநகரின் பெயரை சைவத் தமிழுலகில் விளங்கவைக்க தனது காத்திரமான பங்களிப்பினை வழங்கியவருமான சைவமணி வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களின் புதல்வாரன திரு.பாலச்சந்திரன் கனேடிய அரச நிறுவனமொன்றில் கணக்காய்வாளராக பணியாற்றி வருபவராகும். கனடா-காரை கலாசார மன்றம் உருவாக்கம் பெற்ற ஆரம்ப காலத்தில் அதன் நிர்வாகத்திலும் பின்னர் திட்டமிடல் போசகர் சபையிலும் அங்கம் வகித்து மன்ற வளர்ச்சிக்கு பணியாற்றியிருந்தவர்.
ஸ்காபுரோவில் பல மில்லியன் ரூபா செலவில் அமைந்து பிரபல்யம் பெற்று விளங்கும் சாயி மண்டபம் சாயி சமிக்தியில் இவர் தலைவராக பணியாற்றிய காலத்திலேயே நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவராக பதவியேற்றுள்ள இவரது பதவிக் காலத்தில் மன்றம் காரை மக்களின் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க உழைக்கும் என நம்புகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவர் தலைமையில் அமைந்துள்ள நிர்வாகத்தினை வாழ்த்தி அனுப்பிவைத்துள்ள செய்தியினை கீழே பார்வையிடலாம்.
No Responses to “கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகத்தினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்துகின்றது”