கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளன.
கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் கொண்டாட்ட நிகழ்வுகளிற்கு தலைமை வகித்து உரையாற்றிய போது தாம் பதவியேற்ற குறுகிய ஆறுமாத காலப்பகுதியில் கல்லூரிச் சமூகம் வழங்கிய ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்ததுடன், கல்லூரியின் கல்வித்தர விருத்தி உள்ளிட்ட செயற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்கின்ற அனைவரினதும் எதிர்பார்ப்பினையும் தாம் உணர்ந்துள்ளதாகவும் அதனைப் பூர்த்திசெய்ய விரைந்து பணியாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் காரணமாகவே 125வது ஆண்டு விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்த முடிந்தது என குறிப்பிட்ட அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் இதற்காக கனடா கிளைக்கு கல்லூரிச் சமூகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்தார்;.
மேலும் இவ்விழா சிறப்புற நடத்த நிதி உதவி வழங்கிய சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக்கும், மலர் வெளியீட்டிற்கு பூரண ஆதரவு வழங்கிய கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றும் மருத்துவ கலாநிதி வி. விஐயரத்தினம்; அவர்ளுக்கும் கல்லூரி சார்பாக நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தினர் நிலையான வைப்பினை மேற்கொண்டதனூடாக பாடசாலையின,; எதிர்கால இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான நிதியினை வருடா வருடம் தொடர்ச்சியாக பெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்தமைக்காகவும் நன்றியுணர்வுடன் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
பழைய மாணவர் சங்கத்தின் போசகர் திரு.க.சதாசிவம் அவர்களும் தமது நினைவு தினப் பேருரையில் கனடாவில் பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்தினால் இன்று கல்லூரியில் பல கல்வி விருத்திச் செயற்பாடுகளையும் பௌதிக வள அபிவிருத்தியினையும் செய்வதற்கான ஆதரவுத்தளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் பணியினையும் 125வது ஆண்டு விழா சிறப்புற வழங்கிய ஆதரவினையும் கல்லூரி அதிபர் பாராட்டி நன்றி தெரிவித்தார்.”