மேலதிக படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 13 ஆவது சுற்றாடல் முன்னோடி தேசிய பாசறையில் பங்குபற்றிய காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி செல்வி.அமிர்தா ஆனந்தராஜா தங்கப் பதக்கம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23.08.2017 தொடக்கம் 26.8.2017 வரை மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொட்டகல சிறீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பாசறையில் நாடாளாவிய ரீதியில் 50 பாடசாலைகளைச் சேர்ந்த 276 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டமானது மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலைகள் மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலை நோக்கு கொண்ட சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாகும். சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துதல், சுற்றாடல் முன்னோடிக் குழுவினருக்கு செய்முறை பயிற்சிகளை வழங்குதல் போன்றனவற்றின் ஊடாக சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய அறிவை எடுத்துச் செல்வதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ அநுராத ஜெயரட்ன, மத்தி மாகாணசபை ஆளுநர் கௌரவ நிலுக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் கௌரவ சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
தேசிய மட்டத்தில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கா மாணவிக்கு பதக்கத்தினை அணிவித்தார். வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவரில் செல்வி.அமிர்தா ஆனந்தராஜா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
கல்லூரி அதிபரும் சுற்றாடல் முன்னோடிக் குழு 1 இன் பொறுப்பாசிரியருமான திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்து மாணவிக்கு உற்சாகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராஜாவிற்கு கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த்துக் கொள்கின்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களையும் பாடசாலை முன்றலில் மாணவி அதிபர், பகுதித் தலைவர் ஆகியோருடன் மாணவி நிற்பதனையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.
No Responses to “சுற்றாடல் முன்னோடி தேசிய பாசறையில் தங்கப் பதக்கம் பெற்ற காரை இந்து மாணவி செல்வி.அமிர்தா ஆனந்தராஜா!”