வாழ்த்துச்செய்தி
‘வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பல பல பள்ளி ‘ -பாரதியார்
பள்ளிகள் நிறுவுதல் தர்மங்கள் எல்லாவற்றிலும் தலையாய தர்மம் ஆகும். ‘தானங்களுள் சிறந்தது வித்தியாதானம்.|| ஓப்பற்ற சைவப் பெரியாரும் கல்லூரியின் நிறுவுநரும் ஆகிய அமரர் முத்து சயம்பு அவர்களால் திரு.மு.கோவிந்தபிள்ளை அவர்களது சொந்த நிலத்தில் 1888ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் ஓரு கிடுகுக் கொட்டகையில் ‘இந்து ஆங்கில வித்தியாசாலை|| என பெயரிட்டு தொடக்கி வைத்த மகத்தான செயற்பாடு அவர் இட்ட விதை இன்று பெருவிருட்சமாக நிழல் பரப்பி, அந்நிழலில் நாம் எல்லோரும் இன்று ஒன்று திரண்டுநூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு விழா எடுத்திருப்பதையிட்டு பேருவகை அடைகின்றோம்.
சைவக்கலாசாரத்தையும், தமிழர்கலாசாரத்தையும் உயிர்நாடியாக கொண்ட இப் பாடசாலையை முன்னோர்கள் ‘சயம்பற்றை பள்ளிக்கூடம்|| என்று அழைத்தனர். காலப்போக்கில் பாடசாலையின் வளர்ச்சியினாலும், பாடசாலைஅதிபரின் திறமையினாலும்,திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை, காரைநகர் இந்து கல்லூரி, கலாநிதி ஆ. தியாகராஐh மத்திய மகாவித்தியாலயம் எனறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கல்லூரியின் பொற்காலம் எனப் போற்றப்படும் 1946ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இருபத்தெட்டு வருடங்கள் சேவையாற்றிய பெருமைக்கு உரியவரின் சேவைகளை, சாதனைகளைநினைவுகூரத்தக்கவகையில் தற்பொழுது பாடசாலையின் பெயர் அமைந்திருப்பதை இன்முகத்துடன் வாழ்த்துகின்றோம்.
‘கண்ணுடையர் என்பர் கற்றோர்|| என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க கல்விக் கண்ணைத் திறந்து காரை மண்ணுக்கு ஒளியூட்டிய அமரர் முத்து சயம்பு தொடக்கம் இன்று வரை பாடசாலையின் கல்வியின் வளர்ச்சிக்கு சேவைபுரிந்து சாதனை படைத்த அதிபர்களை நினைவு கூர்ந்து அவர்கள் பாதையில் கல்லூரி வீறுநடை போடவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
நாகரீக உலகின் நல்லவற்றையும் நாடோரும் பெரும் வியத்தகு விஞ்ஞான நுட்பங்களையும் புதுமைகளையும் வளர்ந்துவரும் நவின தொடர் சாதனங்கள்மூலம் எமது ஊரில் கல்வி பயிலுகின்ற மாணவர்களையும் புலம்பெயர் தேசங்களில் பல மொழிகளில் சாதனை படைத்தவரும் மாணவர்களையும் ஒன்றிணைத்து கல்வியறிவு வளர்ச்சிக்கு ஒர் உறவுப்பாலம் அமைத்திட வேண்டுமென வாழ்த்துகின்றோம்.
கலாநிதி ஆ. தியாகராஐh மத்திய மகாவித்தியாலயம் தனித்துவம் மிக்க ஒரு பாடசாலையாக வளர்ச்சி கண்டது. கல்வித்தரத்திலும், விளையாட்டுத்துறையிலும் சாதனைபடைத்து பாடசாலைக்குப் பேரும் புகழும் ஈட்டிக்கொடுத்து. 1950ஆம் ஆண்டு வைரவிழாவும், 1963ஆம் ஆண்டு பவளவிழாவும் 1968ஆம் ஆண்டு முத்துவிழாவும் கொண்டாடிய பாடசாலையின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு விழா 2013இல் சிறப்புற நடைபெற ஈழத்து சிதம்பர சிவகாமி உடனுறை நடராசப் பெருமானை வணங்கி வாழ்த்துகின்றோம்.
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய மாகவித்தியாலயம் 125வது ஆண்டு விழா வெற்றிக்கு வாழ்த்துரைத்த சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை”