தீவக கல்வி வலயத்தில் ஆண்டு 5ல் கல்வி கற்கும் மாணவர்களின் புலமைப் பரிசில் பெறுபேற்றினை உயர்த்துவதற்காக தீவக கல்வி வலயத்தில் ஆண்டு 5ல் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களிற்கும் இலவசமாக வழங்குவதற்கான கற்றல் கையேடு ஒன்றினை அச்சிட்டு வழங்குவதற்காக திரு.திருமதி தம்பிராசா ஆகியோர் நிதி உதவி வழங்கியிருந்தனர்.
அச்சிடப்பெற்ற கையேட்டின் வெளியீட்டு விழா சென்ற புதன்கிழமை (07-08-2013) அன்று சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் நடைபெற்றது, அண்மையில் அமரத்துவமடைந்த தம்பிராசா மாஸ்டருக்கு இரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பமானது.
கையேட்டு நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.வி இராதாகிருஷ்ணன் பிரதேச செயலாளர் திருமதி.க.பாபு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஸ்ரனிலால் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. இராமகிருஷ்ணன் சேவைக்கால ஆலோசகர் திரு.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெளியீட்டு விழாவை தொடர்ந்து காரைநகரின் அனைத்து பாடசாலை மாணவர்களிற்கும் கையேட்டினை அடிப்படையாக கொண்டு பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றன.
இக்கையேட்டு நூல் வெளியீட்டு விழா அதே தினத்தில் (07-08-2013) தீவக கல்வி வலயத்திலுள்ள ஏனைய கல்விக் கோட்டங்களான ஊர்காவற்றுறை நெடுந்தீவு வேலணை ஆகிய கல்விக் கோட்டங்களிலும் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்களும் நடைபெற்றன.
அமரர் தம்பிராசா மாஸ்டர் கல்விப் பணிகளிற்கான உதவிகளையும் செயற்பாட்டினையும் இறுதி மூச்சுவரை ஆற்றி கல்விச் சமூகத்தின் நன்றிக்குரியவராக நினைவு கூரப்படுகின்றார்.
No Responses to “இறுதி மூச்சு வரை கல்விப்பணியாற்றிய அமரர் சின்னத்தம்பி தம்பிராசா (மாஸ்டர்) தீவக வலய ஆண்டு 5 மாணவர்களிற்கு புலமைப் பரிசில் கையேட்டு நூல் விநியோகம்”