பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அது பெற்றுக்கொண்ட அபரிதமான வளர்ச்சியும் வரலாறாக அமைந்து விட்டன என்பது மட்டுமல்லாது இச்சங்கத்தின் நிர்வாக ரீதியான செயற்பாடும் உறுப்பினர்களின் ஒற்றுமையுடனான ஒருங்கிணைந்த உழைப்பும் அதன் பணிகளும் எடுத்துக்கட்டானவை என்கின்ற பாராட்டுக்குரியன என்பதையிட்டு கல்லூரியின் ஒவ்வொரு பழைய மாணவரும் பெருமையடையமுடியும்.
ஆறாவது ஆண்டில் பாதம் பதித்து தனது இலட்சியப் பயணத்தில் வீறு நடைபோட்டு வருகின்ற இச்சங்கத்தின் ஐந்து ஆண்டு காலப் பணிகள்இ கல்லூரியானது அனைத்து மட்டங்களிலும் சாதனைகள் புரிந்து அதன் புகழை விளங்கவைக்கும் வண்ணம் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படும் இத்தருணத்தில் உங்களது பார்வைக்காக அப்பணிகளைத் தொகுத்து வழங்குவதில் பேருவகையடைகின்றோம்.
முழுமையான தொகுப்புக் கோவையை இங்கே அழுத்திப் பார்க்கலாம்.
ஐந்து ஆண்டு கால பணிகளின் தொகுப்பு
No Responses to “பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினால் ஐந்து ஆண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த முக்கியமான பணிகளின் தொகுப்பு”