காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயற்பாட்டில் தாமும் பங்குபற்றும் வகையிலான வாய்ப்பினை ஏற்படுத்தி உதவவேண்டும் என்கின்ற தமது விருப்பத்தினை சர்வதேச நாடுகளில் வதியும் பல பழைய மாணவர்கள் எம்மிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.
இவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எமது சங்க யாப்பில் சர்வதேச நாடுகளில் வதியும் பழைய மாணவர்களும் அவர்களின் உறவினர்களும் இணை உறுப்பினர்களாக(Associate Members) இணைந்து கொண்டு பாடசாலையின் வளர்ச்சியில் பங்குகொள்வதற்கான அரிய வாய்ப்பு சங்கத்தின் யாப்பில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஏற்பாட்டின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிய பிரித்தானியா, ஜேர்மனி பிரான்ஸ், சுவிற்சலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து ஆர்வமுள்ள காரை. .இந்துவின் பழைய மாணவர்கள் இணை உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வற்கு வசதியாக பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ஏற்கனவே பெரிய பிரித்தானியா நாட்டின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதற்கு கல்லூரியின் மூத்த பழைய மாணவரான திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதற்கு திரு.நல்லையா பூங்குன்றன் அவர்களும் முன்வந்துள்ளனர். இவர்களது கல்லூரி மீதான விசுவாசத்தினைப் பாராட்டி நன்றி கூறுகின்றோம். மேலே குறிப்பிட்ட ஏனைய நாடுகளுக்கான பிரதிநிதிகளாகப் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் தமது விருப்பத்தினை பின்னே தரப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொடர்புத் தகவலூடாக தெரியப்படுத்துமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம்.
பிரதிநிதிகளுக்கான வரையறுக்கப்பட்ட கடமைகள் குறித்தும் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமைகள் குறித்தும் பின்னர் இவ்விணையத்தளமூடாக விபரமாக அறியத்தரப்படும்.
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி இலக்கம்: 416-8040587
இணை அங்கத்தவர்கள் தொடர்பில் முழுமையான விபரங்களைப் பார்வையிட பின்வரும் இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் பார்வையிடமுடியும்.
நிர்வாகம;
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக்கிளையின் இணை உறுப்பினர்களை(Associate Members) இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் சர்வதேசப் பிரதிநிதிகளாகப் பணியாற்றக்கூடியவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.”