மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி தேசிய பாசறையில் பங்குபற்றிய காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி செல்வி.அமிர்தா ஆனந்தராஜா தங்கப் பதக்கம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தமை வாசகர்கள் அறிந்ததே.
தங்கப்பதக்கம் பெற்ற செல்வி அமிர்தா ஆனந்தராசா என்ற மாணவியை பழைய மாணவர் சங்க கனடா கிளை பணப்பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது. இந்நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை 15.09.2017 அன்று காலை 8.30 மணிக்கு கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு மாணிக்கம் கனகசபாபதி, பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகியோருடன் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்திருந்தனர்.
தங்கப் பதக்கம் பெற்ற மாணவியைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் அதன் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் பத்தாயிரம் ரூபா (ரூ10,000 ) பணப் பரிசினை மாணவிக்கு வழங்கினார்.
அதிபர் தமது உரையில் இந்நிகழ்விற்கு பணப்பரிசில் வழங்கி சாதனை மாணவர்களை ஊக்குவித்து வரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினருக்கு பாடசாலையின் சார்பாக தமது நன்றியைத் தெரிவிப்பதாக் குறிப்பிட்டார்.
செல்வி அமிர்தா ஆனந்தராசா இலங்கை “வாழ்வின் எழுச்சி” திணைக்களத்தினால் ஜூலை 2015இல் நடத்தப்பட்ட தேசிய மட்ட தனிப்பாடல் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினையும வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நவம்பர் 2016 இல் நடத்தப்பட்ட மாகாண மட்ட பண்ணிசைப் போட்டியில் பிரிவு III இல் பங்குபற்றி இரண்டாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவியாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “தங்கப்பதக்கம் பெற்ற மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசாவைப் பாராட்டி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை கௌரவித்துள்ளது”