காரைநகர் இந்துக் கல்லூரியின் கல்வித் தரம் உயர்வடைய வேண்டும் என்பதில் மிகுந்த கரிசனையுடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையுடன் தொடர்பிலிருந்து பலவித உதவிகளையும் வழங்கி வருபவர் காரை.இந்துவின் பெருமைக்குரிய பழைய மாணவனும் ஐக்கிய அமெரிக்காவில் பொறியயலாளராகப் பணியாற்றி வருபவருமாகிய திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்கள்.
ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து காரை.இந்துவில் கல்வியைத் தொடரும் 49 மாணவர்களின் கற்றலுக்கான மாதாந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு மகேஸ்வரன் அவர்கள் முழுமையான உதவியை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மையில் மகேஸ்வரன் அவர்கள் கல்லூரிக்குச் சென்று அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்திருந்தார். கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் மகேஸ்வரன் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றார். நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காலைப் பிரார்த்தனையுடன் கூடியதாக இவரது சந்திப்பு நிகழ்வு அமைந்திருந்தது. திரு.மகேஸ்வரன் அவர்கள் மாணவர்களின் கற்றல் தொடர்பான அவர்களுக்குப் பயனுள்ள விடயங்களை உள்ளடக்கியதான சிறப்பான உரையினை ஆற்றியிருந்ததுடன் இரண்டாம் தவணைப் பரீட்சையில் அதிகூடிய சராசரிப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு Optimi சான்றிதழ்களை வழங்கிவைத்து ஊக்கிவித்தார்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “மாணவர்களின் கல்வி மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கொடையாளர் பொறியியலாளர் மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் கல்லூரிக்கான பயணமும் மாணவர்களுடனான சந்திப்பும்.”