சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ‘சகோதரபாசல’ என்கின்ற நிகழ்ச்சித் திட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
ஆக்மீமன, காலியில் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியாக பல பாடசாலைகளுடன் இணைந்து எமது பாடசாலையும பங்குகொண்டிருந்தமை குறித்து பாடசாலைச் சமூகம் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது. மாணவர்கள் பங்கேற்று வழங்கிய பல கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றதுடன் மாணவர்கள் காலிக் கடற்பரப்பில் உள்ள திமிங்கிலங்களைப் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எமது பாடசாலையின் சார்பில் ஆசிரியை செல்வி தாட்சாயினி விஜயநாதன் அவர்களுடன் செல்வி ந.நாகேஸ்வரி, செல்வி க.அபினோசா, செல்வி சி.புருசோத்தமி, செல்வி சி.பவித்திரா, செல்வி கி.பிரியா ஆகிய மாணவிகளும் பயணம்செய்து கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே பார்க்கலாம்:
No Responses to “சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலியில் நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் காரை.இந்து மாணவர்களும் பங்கேற்றனர்”