கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
(காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா
நிர்வாக சபைத் தேர்தல் – 2015
போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
மேற்குறித்த தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு தேர்தல் அலவலராக எமது சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நிர்வாகத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் வுpண்ணப்பங்களை பெற்றுக்கொள்வது முதல் தேர்தலை நடாத்தி தெரிவுகளை பிரகடனப்படுத்துவது வரைக்குமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
25-04-2015ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் 7வது நிகழ்வாக நிர்வாக சபை தேர்தல் இடம்பெறும்
தலைவர், உப தலைவர், செயலாளர், உதவி செயலாளர், பொருளாளர், உதவி பொருளாளர், மற்றும்; ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் ஆகிய பதவிகளிற்கு போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 15-04-2015ஆம் திகதிக்கு முன்னதாக தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கலாம். நேரிலும் கையளிக்கமுடியும்.
ஒருவர் ஏதாவது இரு பதவிகளிற்கு விண்ணப்பிக்க முடியும் ஆயினும் இவ்விண்ணப்பங்கள் தனித்தனியாக அனுப்பப்படல்வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் இரு அங்கத்தவர்களினால் முறையே பிரேரித்து வழிமொழியப்பட்டிருக்கவேண்டும். வுpண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து தேர்தல் அலுவலரால் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரிகளிற்கு உறுதிப்படுத்தப்படும்.
விண்ணப்பதாரியும் பிரேரிப்பவரும் வழிமொழிபவரும் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக சங்க அங்கத்துவத்தை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலரும்இ நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் karaihinducanada.com இணையத்தளம் ஊடாக அங்கத்தவர்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.
ஒரு பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் nதிரிவு இடம்பெறும். வுpண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான வெற்றிடம் சமூகமளித்திருக்கும்
அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து நிரப்பப்படும். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பதாரர் விரும்பின் தமது விண்ணப்பத்தினை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்.
தபால் முகவரி: Mr. T. Visuvalingam, 1008-50 Elm Drive, Mississauga, ON. L5A 3X2.
மின்னஞ்சல் முகவரி: tvisuvalingam@yahoo.com தொலைபேசி இல.: 905-566-4822
விண்ணப்பப் படிவத்தை இங்கே அழுத்தித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபைத் தேர்தல் – 2015”