காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் எத்தியோப்பியா மடவளபு பல்கலைக் கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஐயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் நேற்றய தினம் 12-01-2018 வெள்ளிக்கிழமை காலை 8.00மணிக்கு நடைபெற்றது.
கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்ட இவ் அஞ்சலிக் கூட்டத்தில் அன்னாரது ஆத்ம சாந்திக்காக இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தது.
கலாநிதி கென்னடி அவர்கள் சிறந்த கல்விமானாகவும் மக்களின் தொண்டனாகவும் விளங்கி கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் தமிழ் மக்களுக்கான பணியிலும் காரை.மண்ணின் மக்களுக்கான பணியிலும் பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்தி அனைவர் நெஞ்சங்களிலும் நிலைபெற்றுவிட்ட உன்னதமான மக்கள் சேவையாளன் என திருமதி சிவந்தினி தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டிருந்தார். கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அன்னாருக்கு அஞ்சலி தெரிவித்து பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது”