துள்ளித் திரிந்த கால
பள்ளித் தோழனே! கென்னடி!
கள்ளமில்லாத உன்னைத் தெரிந்து
அள்ளி எடுத்தானோ அந்த ஆண்டவன்?
உலகப் பந்தின் தேசங்களில்
உறங்கிக் கிடந்த எம்மை
ஊக்கம் கொடுத்து ஒன்றிணைத்தாயே!
உள்ளெழும் கேள்விக்கு பதில் இல்லையே!
உற்ற தோழனாய்
உண்மைச் சகோதரனாய்
பெண்மையைப் போற்றிய
புதுமைப் பாரதியே!
சின்னச் சின்ன திறனையெல்லாம்
செதுக்கி வளர்த்த சிற்பியே!
அடுத்த சந்ததிக்கு
அடியெடுத்துக் கொடுத்தவனே!
சென்று வா நண்பா!
உன்னத நட்பு எம்நெஞ்சில் நிலைத்திருக்கும்!
உன் சிந்தனைகள் எமக்கு வழிகாட்டும்!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திண்ணபுரத்து தில்லைக் கூத்தனைப் பிரார்த்திக்கின்றோம்
உன் பிரிவால் துயருறும் 1967 இல் பிறந்த காரைநகரைச் சேர்ந்த பள்ளித் தோழர்கள்
No Responses to “கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் பாடசாலைகளில் அன்னாருடன் கல்வி கற்ற 1967 இல் பிறந்த பள்ளி நண்பர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி ”