காரைநகர் இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்று கூடலும் மதியபோசன விருந்தும் சென்ற 19-12-2023 செவ்வாய்க்கிழமை மதியம் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் ஞா.தயாபரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.G.V.இராதாகிருஸ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.பொன்னம்பலம் சகிலன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு.பகீரதன் பார்த்தீபன், கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினரும் ஓய்வுநிலை பௌதிகவியல் ஆசிரியருமாகிய திரு.இ.தருமராசா, கல்லூரியின் முன்னாள் அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர். விருந்தினர்களும் உயர்தர மாணவர் மன்றத்தின் காப்பாளரான அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களும் உரையாற்றினர்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “சிறப்பாக நடைபெற்ற உயர்தர மாணவர் மன்றத்தின் ஒன்றுகூடலும் மதியபோசன விருந்தும்.”