சுப்பர் சிங்கர் கலைஞர் ஒருவர் வழங்கவுள்ள ‘ராக சங்கமம்’ சிறப்பு நிகழ்வாக இடம்பெறவுள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அது தோற்றம் பெற்ற குறுகிய ஐந்து ஆண்டுகளில் அதனால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்த மூன்று இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட ஐந்து பொது நிகழ்வுகளை வெற்றிகரமானதாக அமைத்து மக்களின் வரவேற்பினையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தகைய நிகழ்வுகளின் வரிசையில் மற்றுமொரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகக் கருதப்படக் கூடிய சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழாவினை வெகு சிறப்பாக முன்னெடுப்பதெனத் தீர்மானித்து அதற்கான திட்டமிடலிலும் ஏற்பாடுகளிலும் சங்கத்தின் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Birchmount & Eglinton சந்திப்பிற்கு அருகாமையில் 733 Birchmount Road என்ற முகவரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கனடா கந்தசுவாமி கோயிலின் அழகிய கலை அரங்கில் இவ்விழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
விNஐ தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் தெரிவுக்கான இறுதிப் போட்டியின் இரண்டாவது வெற்றியாளரும் பின்னணிப் பாடகரும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களை தனதாக்கிக் கொண்டுள்ளவருமான பிரபல்யம் மிக்க பாடகர் ஒருவர் பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று தமிழகத்திலிருந்து வருகைதந்து இவ்விழாவில் இசை நிகழ்ச்சியை வழங்கவிருப்பது சிறப்பம்சமானதாகும்
இவ்விழா கல்லூரியின் வளர்ச்சியினை நோக்கி எழுச்சி மிக்கதாக அமைய ஒழுங்கமைக்கப்பட்டு வருவதுடன் இவ்விழா குறித்த விபரங்கள் அங்கத்தவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் விரைவில் அறியத்தரப்படும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளை முன்னெடுக்கும் மற்றுமோர் வரலாற்று நிகழ்வாக 5வது ஆண்டு விழா!”