12 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்
கடந்த டிசம்பர் மாதம் 2017 இல் நடைபெற்ற க.பொ.த சா-த பரீட்சைப் பெறுபேறுகள அண்மையில் வெளிவந்துள்ளன.
மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் 9A என்ற பெறுபெற்றினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபெற்றினைப் பெற்ற பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி திகழ்கின்றது.
செல்வி சிவராஜினி பாலேந்திரா, செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் ஆகிய இரு மாணவர்களுமே எல்லாப் பாடங்களிலும் அதிசிறப்புச் சித்தி (9A ) பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் 2005 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் காரைநகர் இந்துக் கல்லூரிக்குக் கிடைக்கப்பெற் 9A முதன்மைப் பெறுபேற்றுக்குப் பின்னர் 2017 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் என்ற மாணவன் 8A B என்ற பெறுபேற்றினையும், மேலும் 3 மாணவர்கள் 4A இனையும் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் 7 மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு – 2017
மாணவர் பெயர் | பெறுபேறு | |
1. | செல்வி சிவராஜினி பாலேந்திரா | 9A |
2. | செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் | 9A |
3. | செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் | 8A B |
4. | செல்வி தாரணி சடாட்சரம் |
4A 3B C S |
5. | செல்வி அமிர்தா ஆனந்தராசா |
4A 3B C |
6. | செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன் |
4A B 2C S |
7. |
செல்வி பிருந்தா கோவிந்தராசா |
3A 2B 3C S |
வலய மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு பெற்று சாதனை படைத்த மாணவர்களையும் சிறப்புப் பெறுபேறு பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் வழிநடத்திய அதிபர் அவர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
கீழே சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், ஆசிரியர்களுடன் மாணவர்களின் படங்களையும் காணலாம.
செல்வி சிவராஜினி பாலேந்திரா – 9A
செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் – 9A
செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் – 8A, B
செல்வி தாரணி சடாட்சரம் 4A 3B C S
செல்வி அமிர்தா ஆனந்தராசா 4A 3B C
செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன 4A B 2C S
செல்வி பிருந்தா கோவிந்தராசா 3A 2B 3C S
No Responses to “க.பொ.த சா-த பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மைப் பெறு பேறு பெற்று காரை இந்து சாதனை”