காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்) ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கல்லூரியின் அதிபரும் சங்கத்தின் தலைவருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
அதிபரின் அறிக்கை, செயலாளரின் அறிக்கை, பொருளாளரின் அறிக்கை என்பன முறையே திருமதி சிவந்தினி வாகீசன,; திரு.நடராசா பாரதி, திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டிருந்ததுடன் அவை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
புதிய நிர்வாக சபைத் தெரிவின் போது பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
தலைவர் – திருமதி சிவந்தினி வாகீசன் (அதிபர்)
உப தலைவர் – பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலை அதிபர்)
செயலாளர் – திரு.சு.அகிலன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்)
உப செயலாளர் – திரு இ.திருப்புகழூர்சிங்கம் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்)
பொருளாளர் – திரு. க. நிமலதாசன் (தபாலதிபர்)
உப பொருளாளர் – திரு.செ.அருட்செல்வம் (ஆசிரியர்)
நிர்வாகசபைஉறுப்பினர்கள்
1. திரு.தெ. லிங்கேஸ்வரன் (ஆசிரியர்)
2. திருமதி ப. அமுதசிங்கம் (ஆசிரியர்)
3. திருமதி யோ. யோகநாதன் (ஆசிரியர்)
4. திரு வி. ஹம்சன் (இலங்கைப் போக்குவரத்துச் சபை உத்தியோகத்தர்;)
5. திரு ந.யோகநாதன் (தொழிலதிபர்)
6. திரு த. சற்குணராசா (தொழிலதிபர்)
7. திரு ந. பாரதி (சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்)
8. செல்வி நா. கலைச்செல்வி
9. திரு க. நாகராசா (ஓய்வுபெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர்)
10. திரு வே.சபாலிங்கம் (ஓய்வுபெற்ற கட்டிடித் திணைக்கள உத்தியோகத்தர்)
உள்ளகக் கணக்காய்வாளர்: திரு. இராமநாதன் சிவசுப்பிரமணியம் (ஓய்வுநிலை வங்கி உத்தியோகத்தர்)
இப்பொதுக் கூட்டத்தில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
No Responses to “காரை. இந்து பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் சிறப்பாக நடைபெற்றது.”