மருத்துவக் கலாநிதி இராமலிங்கம் செல்வராசாவும் அவரது துணைவியார் மருத்துவக் கலாநிதி சறோ செல்வராசாவும் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் இவ்விழாவிற்கு பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் உணர்வுபூர்வமாக வழங்கிவரும் ஆதரவும் உதவிகளும் இவ்விழா உன்னதம் பெற்று காரை.இந்து அன்னையை பெருமைகொள்ளவைக்கவுள்ள பெரு விழாவாக அமையவுள்ளது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவுள்ளன எனவும் விழா அமைப்புக் குழுவின் சார்பில் சங்கத்தின் உப தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் தெரிவிக்கின்றார். திரு.குஞ்சிதபாதம் மேலும் தெரிவிக்கையில் இவ்விழாவினைச் சிறப்பிக்க கல்லூரி அன்னையின் மகிமைமிக்க புதல்வர்களாகிய மருத்துவக் கலாநிதி இராமலிங்கம் செல்வராசாவும் அவரது துணைவியார் மருத்துவக் கலாநிதி சறோ செல்வராசாவும் பிரதம விருந்தினர்களாக ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலிருந்து வருகைதரவுள்ளனர்.
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் OHIO மாநிலத்தின் SPRINGFIELD நகரில் Sai Family Pratice என்கின்ற மருத்துவ நிலையத்தினை நடத்தி மருத்துவ சேவையாற்றி வருகின்ற மருத்துவக் கலாநிதி செல்வராசா அவர்கள் இலங்கையிலும் நைஜீரியாவிலும் உள்ள பொது வைத்தியசாலைகளில் மருத்துவப் பணியாற்றியிருந்தவர். இவரது துணைவியாரான மருத்துவக் கலாநிதி சறோ செல்வராசா அவர்களும் இலங்கையிலும் நைஜீரியாவிலும் உள்ள பொது வைத்தியசாலைகளில் மருத்துவராக பணியாற்றியிருந்தவராவார்.
இந்து அன்னையின் புதல்வர்களான இவர்கள் இருவரும் வரலாற்றுப் பெருமை மிக்க விழாவின் பிரதம விருந்தினர்களாக கலந்தகொள்ளவிருப்பது விழாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்தள்ளது.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ‘இசை அருவி’ என்கின்ற அற்புதமான இசைக் கச்சேரியை வழங்கவுள்ள ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற சுப்பர் சிங்கர் ஷ்ரவண் புதன் கிழமை சென்னையிலிருந்து ரொறன்ரோவை வந்தடையவுள்ளார். கல்லூரிப் பண்ணிற்கான நடனம், விழா மலர் வெளியீடு, அனுசரணையாளர்களுக்கான மதிப்பளிப்பு என விழாவின் ஏனைய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் கலந்துகொள்வோரின் நலன்கருதி சிற்றுண்டி வகைகளும் தேநீரும் இலவசமாகப் பரிமாறப்படவுள்ளதாகவும் திரு.குஞ்சிதபாதம் மேலும் தெரிவித்தார்.
No Responses to “காரை.இந்து அன்னையை பெருமைப்படுத்தவுள்ள பெரு விழாவிற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி என விழாக்குழு அறிவிப்பு”