பழைய மாணவர் சங்கத்தின் 5வது ஆண்டு விழாவும் ‘இசை அருவி’ நிகழ்வும் சிறப்புற்று விளங்க கல்லூரி அதிபர் வாழ்த்துகின்றார்.
“இன்னிசை அணிந்த நம் பொன்னிளம் செல்வியை”என்னும் கல்லூரித் தாயின் கீதத்திற்கமைய இனிமையான இசையினை பருகிட நினைத்த கனடா வாழ் கல்லூரியின் மைந்தர்கள் அணிதிரண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டு விழாவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சுப்பர்சிங்கர் R.P.ஷ்ரவணின் கர்நாடக இசைக் ;கச்சேரியானது செவிக்கு இனிமை தந்து மனதிற்கு மகிழ்வூட்டி சிறப்புற நடைபெற எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன் என கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
திருமதி சிவந்தினி தமது வாழ்த்தச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில் எமது பாடசாலையின் வளர்ச்சியில் அயராது உழைத்து கல்லூரியை மென்மேலும் வளர்க்கவேண்டும் என்னும் உணர்வுடன் பணியாற்றி வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் செயற்பாடுகள் அளப்பரியனவாகும். இவர்களது சேவையினால் எமது பாடசாலை துரித வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. அந்தவகையில் இவ்வாண்டு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு மாணவர்கள் 9A சித்தியினையும், ஒருமாணவன் 8யுஇ டீசித்தியினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வலயம், மாகாணம், தேசியம் என்ற வகையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி எமது பாடசாலையானது எல்லோராலும் போற்றப்படும் பாடசாலையாக திகழ்கின்றது. இவ்வாறு எமது பாடசாலையானது சிறப்பான பாடசாலையாக திகழ பாடசாலைக்கு நேரில் வருகைதந்தும்,தொலைபேசி மூலமாகவும் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வருகின்ற கனடா பழைய மாணவர் சங்கத்தின்;; ஒத்துழைப்பும் அனுசரணையும் மிகப்பெரியது.
எனவே நடைபெற இருக்கும் 5வது ஆண்டு விழாவும் ‘இசை அருவி’ இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் இறைவனை வேண்டுகின்றேன்.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் 5வது ஆண்டு விழாவும் ‘இசை அருவி’ நிகழ்வும் சிறப்புற்று விளங்க கல்லூரி அதிபர் வாழ்த்துகின்றார்”